பிரபல நடிகைக்கு திடீர் திருமணம் - பிரபலங்கள் வாழ்த்து !!

பிரபல நடிகைக்கு திடீர் திருமணம் - பிரபலங்கள் வாழ்த்து !!

பிரபல நடிகைக்கு திடீர் திருமணம் - பிரபலங்கள் வாழ்த்து !!
X

பிரபல நடிகை யாமி கவுதம் திடீரென்று திருமணம் செய்துகொண்டார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை யாமி கௌதம் பெரும்பான்மையாக இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சில தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் பஞ்சாபி மொழி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். திரைப்படங்களில் மட்டுமல்லாது சில வணிக கிளைகள் மற்றும் பொருட்களின் புகழ்பெற்ற மேற்குறிப்பாளராகவும் உள்ளார்.

இவர் நடித்த முதல் படம் 2012 ஆம் ஆண்டில் பாலிவுட்டில் வெளியான விக்கி டோனர் ஆகும். இந்தத் திரைப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.இவர் சாந்த் கே பார் சலோ எனும் தொலைக்காட்சி நாடகத் தொடரில் முதன்முறையாகத் தோன்றினார். அதன் பின் ராஜ்குமார் ஆர்யன் போன்றத் தொடர்களிலும் நடித்தார். மேலும் கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளிவந்த யா பியார் நா ஹோஹா கம் எனும் தொடரில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார்.

இவரின் முதல் தமிழ்த் திரைப்படம் தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும் ஆகும் . இதனை கௌதம் மேனன் தயாரித்தார். ஜெய்யுடன் இணைந்து நடித்திருப்பார். இவரின் இரண்டாவது இந்தித் திரைப்படம் ரிலையன்ஸ் நிறுவனம் தயாரித்த டோடல் சியப்பா ஆகும். இதில் அலி சபாருடன் இணைந்து நடித்திருப்பார். 2014 ஆம் ஆண்டில் இந்தத் திரைப்படம் வெளியானது.பின் 2019-ம் ஆண்டு வெளியான 'யூரி - தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' படத்தில் நடித்தார்.

2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது ஆதித்யா தர் - யாமி கவுதம் இருவருக்கும் காதல் உருவானது. அதனைத் தொடர்ந்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் இன்று (ஜூன் 4) திருமணம் செய்து கொண்டனர். கரோனா அச்சுறுத்தல் காரணமாக குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.



Tags:
Next Story
Share it