பிரபல நடிகை மரணம்.. திரையுலகினர் இரங்கல்..!
பிரபல நடிகை மரணம்.. திரையுலகினர் இரங்கல்..!

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாலிவுட் நடிகை வத்சலா தேஷ்முக், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 92.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்தவர் பழம்பெரும் பாலிவுட் நடிகை வத்சலா தேஷ்முக். மராத்தி மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ள இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உடல் சிவாஜி பூங்கா மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
வத்சலா தேஷ்முக்கின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளன
Next Story

