பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி- ரசிகர்கள் பிரார்த்தனை !!

பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி- ரசிகர்கள் பிரார்த்தனை !!

பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி- ரசிகர்கள் பிரார்த்தனை !!
X

இந்தி திரையுலகில் முன்னணி இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை முர்னல் தாகூர். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்தி, மராத்தி போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டூபன் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நடிகை முர்னல் தாகூர்-க்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவருடைய சமூக வலைதளபக்கத்தில் அவரே பதிவு செய்துள்ளார்.
mrunal_thakoor

அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை லேசான அறிகுறியுடன் தொற்று உறுதியாகியுள்ளது. நான் நலமுடன் உள்ளேன். மேலும், நான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். டாக்டர்கள் தெரிவித்த அறிவுறுத்தல்களை நான் கடைபிடித்து வருகின்றேன்.

என்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள் விரைவில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அனைவரும் கவனமாக இருங்கள் என பதிவிட்டுள்ளார். ஏற்கனவே மகாராஷ்டிராவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது நடிகைக்கு பரவியுள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

mrunal_thakoor

newstm.in

Tags:
Next Story
Share it