பிரபல நடிகை சசிகலா திடீர் மரணம்! பிரபலங்கள் இரங்கல்
பிரபல நடிகை சசிகலா திடீர் மரணம்! பிரபலங்கள் இரங்கல்

பாலிவுட் மூத்த நடிகை சசிகலா மரணமடைந்தார். அவருக்கு வயது 88. பாலிவுட்டில் திரையுலகில் 70களில் முடிசூடா ராணியாக திகழ்ந்தவர் நடிகை சசிகலா. பாலிவுட்டில் வெளியான நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சசிகலா ஜவால்கர். சோலாப்பூர் மாவட்டத்தில் பிறந்த இவர் ஹம்ஜோலி, சர்ஹம், சோரி சோரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

திரைத்துறை மட்டுமல்லாமல், சின்னத்திரை தொடர்களிலும் நடித்து பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டிருந்த நடிகை சசிகலா கடந்த 2007ம் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக நேற்று மாலை நடிகை சசிகலாவின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags:
Next Story

