Theme Check

பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் மூடல்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் மூடல்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் மூடல்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
X

அமெரிக்காவின் பிரபல கார் நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் கார்கள் தயாரிப்பதை நிறுத்த முடிவெடுத்த நிலையில், குஜராத் மற்றும் தமிழகத்தில் உள்ள ஆலைகளை மூடுவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தது.

இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, சென்னை மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு இந்தியா பிரிவை கையகப்படுத்துவது குறித்து தமிழக அரசு டாட்டா குழுமத்துடன் கலந்துரையாடியது.

இந்நிலையில், வரும் ஜூன் 30-ம் தேதியுடன் மறைமலைநகரில் உள்ள கார் தயாரிக்கும் நிறுவனமான ஃபோர்டு மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆலையில் சுமார் 2500 தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், ஃபோர்டு நிறுவனம் மூடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இது, அங்கு பணிபுரியும் ஊழியர்களிடையே பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஃபோர்டு நிறுவனம், நஷ்டத்தில் இருக்கும் இந்திய யூனிட்டை கைவிட்டு, மின்சார மற்றும் தானியங்கி வாகனங்களில் முதலீடுகளை அதிகரிக்க உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story
Share it