Theme Check

ரயில்களில் இரவு நேரங்களில் செல்போன் சார்ஜ் செய்ய முடியாது.. பகீர் அறிவிப்பு !

ரயில்களில் இரவு நேரங்களில் செல்போன் சார்ஜ் செய்ய முடியாது.. பகீர் அறிவிப்பு !

ரயில்களில் இரவு நேரங்களில் செல்போன் சார்ஜ் செய்ய முடியாது.. பகீர் அறிவிப்பு !
X

ரயில்வே நிர்வாகத்தின் மேம்பாட்டிற்காகவும் பாதுகாப்பு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்ககைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது எடுக்கப்பட்டட ஒரு நடவடிக்கை விவாதத்தை உருவாக்கிள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு, பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, ரயில் பெட்டிகளில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செல்போன் சார்ஜிங் பாயிண்டுகள் அணைத்து வைக்கப்பட வேண்டும் என்று ரயில் பாதுகாப்பு கமிஷனர் பரிந்துரைத்தார். மின்கசிவு அபாயத்தைத் தவிர்க்க அவர் இவ்வாறு அறிவுறுத்தினார்.

இந்நிலையில், பாதுகாப்பு கமிஷனரின் பரிந்துரையை தீவிரமாக அமல்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனினும் கடந்த 16 ஆம் தேதியே முதல் இதை நடைமுறைக்கு கொண்டுவந்துவிட்ட மேற்கு ரல்வே நர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜிங் பாயிண்டுகளுக்கான மின் துணைப்பை துண்டித்து விடுகிறது.
ரெயில்வே வாரியத்தின் அறிவுறுத்தலின்படி தாங்கள் இதை அமல்படுத்தி வருவதாக மேற்கு ரயில்வே தலைமை மக்கள்தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஏற்கனவே உள்ள அறிவுறுத்தல் தற்போது வலியுறுத்தப்படுவதாகவும், அது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெற்கு ரெயில்வேயும் அறிவித்துள்ளது.இதனால் குறிப்பிட்ட, இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை இனி ரெயில்களில் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியாது.

ரெயில்களில் தீ விபத்துகளை தவிர்க்க வேறு பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும், அதுகுறித்து பயணிகள் உள்ளிட்டோருக்கு 7 நாட்களுக்கு தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மண்டல ரயில்வே நிர்வாகங்களை கேட்டுக்கொண்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it