மக்களிடம் இருக்கும் நகைகளை வாங்க மத்திய அரசு உத்தரவு..!
மக்களிடம் இருக்கும் நகைகளை வாங்க மத்திய அரசு உத்தரவு..!

தங்க நகை வர்த்தகத்தில் நடைபெறு முறைகேடுகளை தடுப்பதற்காக பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதித்த நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அத்துடன், இதுவரை 10 கிரேடுகளில் தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி 14 கேரட், 18 கேரட், 22 கேரட் ஆகிய மூன்று கிரேடுகளில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

புதிய தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டிருக்கும் அதே நேரம், மக்களிடம் இருக்கும் ஹால்மார்க் முத்திரை அல்லாத பழைய நகைகளை அப்படியே பெற்றுக்கொள்ளவும் நகை வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
நகை உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் ஹால்மார்க் நகைகளுக்கு மாறுவதற்காக ஆகஸ்ட் மாதம் இறுதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதுவரை அபராதம் விதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த புதிய உத்தரவினால் எழும் பிரச்னைகள் குறித்து முடிவெடுக்க சிறப்பு கமிட்டி ஒன்றையும் அமைத்திருக்கிறது மத்திய அரசு.

