கதறியழுத மகளிர் ஆணைய தலைவி! ஆனாலும் மருத்துவ வசதி கிடைக்கலை! டெல்லியில் பறிபோன உயிர்!
கதறியழுத மகளிர் ஆணைய தலைவி! ஆனாலும் மருத்துவ வசதி கிடைக்கலை! டெல்லியில் பறிபோன உயிர்!

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் அரை மணி நேரம் கெஞ்சியும் கொரோனா பாதித்த தனது தாத்தாவை மருத்துவமனையில் அனுமதிக்காததால் அவர் உயிரிழந்துவிட்டதாக டெல்லி மாநில மகளிர் ஆணைய தலைவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா 2ஆவது அலை கொடூரமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பிட்ட 10 மாநிலங்களில் நோய் பரவல் மிக வேகமாக உள்ளது.
அதில் தலைநகர் டெல்லியும் ஒன்று. கடந்த அலையின் போதும் டெல்லி கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது 2ஆவது அலையும் டெல்லியை விட்டுவைக்கவில்லை. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதித்த தனது தாத்தாவை கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்க அழைத்துச் சென்ற போது அவர் இறந்துவிட்டதாக டெல்லி மாநில மகளிர் ஆணையர் வேதனை தெரிவித்துள்ளார்.
My nana died waiting for emergency support in front of Sharda Hospital Greater NOIDA. I kept standing there for half hour and pleading for admission and nothing happened. Shame! Pathetic!
— Swati Maliwal (@SwatiJaiHind) April 22, 2021
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், சாரதா மருத்துவமனையில் தனது தாத்தாவை சேர்க்க 30 நிமிடங்கள் காத்திருந்து, எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் அனுமதிக்கவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார். மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டதால் தனது தாத்தா இறந்துவிட்டதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

