கொரோனா சிகிச்சையில் மருத்துவர்களுக்கு சவால்.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு !
கொரோனா சிகிச்சையில் மருத்துவர்களுக்கு சவால்.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு !

இந்தியா கொரோனா வைரஸின் இரண்டாவது அலை எதிர்பார்த்ததை விட பெரியளவில் பாதிப்பையும் அழிவையும் ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுதும் தினமும் 3 லட்சத்திற்கு அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் சதவிகிதமும் அதிகரித்து வருகிறது.
அதேநேரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அதிகளவிலான மருத்துவ துறையினர் அப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களின் நிலை நாளுக்கு நாள் சவாலை அதிகரித்து வருகிறது. கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து நீண்ட நேரம் பணிபுரியும் மருத்துவரால், இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்குக்கூடக் கடினமாக இருக்கும். மாதவிடாய் நாட்களில் பெண் மருத்துவர்கள் எல்லா சிக்கலையும் சமாளித்தே இந்த உடையை அணிந்து பணிபுரிகின்றனர்.

மேலும் வேலைப்பழுவால் மருத்துவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் கூட தற்போது ஆங்காங்கே நடக்கின்றன என செய்திகள் வெளிவருகிறது. அதேபோல் துப்புரவுத்தொழிலாளர்களின் பணியும் மகத்தான ஒன்று. இந்நிலையில் பிரதமர் அலுவலகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
100 நாட்கள் கொரொனா தொற்று சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு வரும் காலங்களில் அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அமல்படுத்தப்படுமாயின் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு இது நற்செய்தியாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

எனினும் கொரோனா வார்டுகளில் கூடுதல் மருத்துவர்களை நியமித்து மனதளவில் அவர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுகிறது.
newstm.in

