அடுத்த 4 நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
அடுத்த 4 நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 4 நாள்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கியிருக்கும் நிலையில், பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லையில் கனமழை பெய்கிறது. அதேபோல் சென்னையில் இரண்டுநாட்களாக லேசான மழை பெய்து தற்போது ஓய்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பொழிந்தது. விளைநிலங்களில் மழைநீர் தேங்கியது. இதேபோல் தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் கோடை வெயில் தனிந்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதனிடையே, வரும் 17 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் சேலம், தருமபுரி, திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
15.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமாரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், சேலம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
16.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி , திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

17.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், லட்சத்தீவு, குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
newstm.in

