Theme Check

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!
X

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காலமான தற்போது தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அதன்படி இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தென்காசி, திருச்சி ,சேலம், நாமக்கல், கோயமுத்தூர், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி ,திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain 1

ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும். அத்துடன் மழையானது வருகின்ற 8ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வலுவிழந்துள்ள ஜாவத் புயல் ஒடிசா மாநிலம் பூரி அருகே இன்று பிற்பகல் கரையைத் தொட்டு மேலும் வலுவிழந்து நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it