Theme Check

இந்த 10 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு.. அதுல உங்க மாவட்டம் இருக்கா..?

இந்த 10 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு.. அதுல உங்க மாவட்டம் இருக்கா..?

இந்த 10 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு.. அதுல உங்க மாவட்டம் இருக்கா..?
X

‘தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் உட்பட 10 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று (31-ம் தேதி) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது: “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று (31-ம் தேதி) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் ஜூன் 1, 2 மற்றும் 3-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று (31-ம் தேதி) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 39 - 40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 - 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதி, குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story
Share it