Theme Check

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!!
X

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள் மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain 1

இதனிடையே நேற்று புதுச்சேரியில் திடீரென மழை பெய்தது. புதுச்சேரி நகரப் பகுதிகளில் மட்டுமன்றி, சுற்று வட்டார கிராமப் பகுதிகளிலும் மழை பெய்தது.

பராமரிப்புப் பணிகள் காரணமாக நகரப் பகுதியில் நேற்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. மழையின் காரணமாக இரவு 7 மணி வரை நகரப் பகுதிகளில் மின்சாரம் விநியோகிக்கப்படவில்லை.

newstm.in

Next Story
Share it