தமிழகத்தில் இந்த இரு நாட்களிலும் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இந்த இரு நாட்களிலும் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களை கட்டி, அரசியல் தலைவர்களின் அனல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கும் நிலையில், மக்களுக்கு சந்தோஷ செய்தியாக தென்மாவட்டங்களில் இந்த வார இறுதியில் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் வறண்ட வானிலை நீடிக்கும் என்றும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமை (மார்ச் 20, 21) தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
Tags:
Next Story