Theme Check

பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம்.. பள்ளிக் கல்வித்துறை திடீர் உத்தரவு !!

பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம்.. பள்ளிக் கல்வித்துறை திடீர் உத்தரவு !!

பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாற்றம்.. பள்ளிக் கல்வித்துறை திடீர் உத்தரவு !!
X

தமிழகத்தில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில் பள்ளிகள் திறக்கப்பட்டன. எனினும் அதன்பிறகு கொரோனா 3ஆவது அலை காரணமாக கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.

பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து பிப்ரவரி 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். 15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
exam girls school

எனினும் கொரோனா பரவல் முழுவதும் குறையாத நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இதை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையில் கொரோனா விடுமுறை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் கட்டாயம் பொதுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு நெருங்கி வரும் நிலையில் விரைந்து பாடங்களை முடிக்க பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
exam girls school
எனவே தற்போது அனைத்து பள்ளிகளும் காலை, பிற்பகல் என்று முழு நேரமும் செயல்பட வேண்டும். அனைத்து பாட வேலைகளிலும் கட்டாயம் மாணவர்களுக்கு பாடங்களை தடை இன்றி நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், முழு நேரமும் பள்ளிகள் இயங்க வேண்டும். மாணவர்களை முழு அளவில் நேரடியாகப் பள்ளிக்கு வர வைத்து பாடம் நடத்த வேண்டும். இதனிடையில் அரை நாள் மட்டும் பள்ளிகளை நடத்துவதும், ஓரிரு மணி நேரத்தில் மாணவர்களை வீட்டுக்கு அனுப்புவதும் ஆகியவை நடைபெற கூடாது. அவ்வாறு நடைபெற்றால் அப்பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களையும் குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

Next Story
Share it