Theme Check

துரத்தும் கொரோனா.. சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸிக்கு பாசிட்டிவ் !

துரத்தும் கொரோனா.. சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸிக்கு பாசிட்டிவ் !

துரத்தும் கொரோனா.. சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸிக்கு பாசிட்டிவ் !
X

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

ஐபி­எல் தொட­ரில் விளை­யாடி வரும் கிரிக்­கெட் வீரர்­க­ள் பயோ பபுளில் இருந்தபோதும் கொரோனா வைரஸ் தொற்று அவர்களையும் விட்டுவைக்கவில்லை. கடுமையான பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் கிரிக்­கெட் வீரர்­களுக்கு தொற்று ஏற்­பட்­டுள்­ளது ஐபி­எல் நிர்­வா­கத்தை கவலை அடையச் செய்துள்ளது.

கொல்­கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்­கள் வருண் சக்­ர­வர்த்தி, சந்­தீப் வாரி­யர் இரு­வ­ருக்­கும் பாதிப்பு இருப்­பது உறுதி செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து கொல்­கத்தா, ஆர்­சிபி அணி­க­ளுக்கு இடை­யி­லான ஆட்­டம் ரத்து செய்­யப்­பட்­டது. அடுத்து சன்­ரை­சர்ஸ் அணி வீரர்­கள் சஹா, டெல்லி அணி­யின் அமித் மிஸ்­ரா­வுக்கு பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டதால் ஐபி­எல் தொடர் நிறுத்தப்­ப­டு­வ­தாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக் ஹஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சென்னை அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதி செய்துள்ளார்.

சென்னை அணியுடன் பயோ பபுளில் இருந்த பவுலிங் பயிற்சியாளர் பாலாஜி, காசி விஸ்வநாதன் மற்றும் பேருந்து சேவை பணியாளர் ஒருவருக்கு தொற்று உறுதியானது. அடுத்து நான்காவதாக மைக் ஹஸ்ஸி பாதிக்கப்பட்டுள்ளார். அவர் டெல்லியில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தொற்று பாதிக்கப்பட்டுள்ளதால் மைக் ஹஸ்ஸி தனது சொந்த நாடானத ஆஸ்திரேலியா பறப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

எனினும், நோய் தொற்று பாதிப்பிலிருந்து அவர் மீண்டதும் மாலத்தீவு வழியாக ஹஸ்ஸி அவரது தாய் நாட்டிற்கு திரும்புவார் என்றும் அதற்கான பணிகளை சென்னை அணி நிர்வாகம் கவனித்துக் கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலுக்கும் மத்தியில் போட்டி நடத்தப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it