பள்ளி மாணவியிடம் ஆபாச வீடியோ சாட்டிங்... ஆசிரியர் அதிரடி கைது!!
பள்ளி மாணவியிடம் ஆபாச வீடியோ சாட்டிங்... ஆசிரியர் அதிரடி கைது!!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக உள்ள நிலஒளி (40) என்பவர் பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி மொபைலில் ஆபாசமாக வீடியோ எடுத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
ஆசிரியருக்கு பயந்த மாணவி கடந்த நான்கு மாதத்திற்கு மேலாக ஆசிரியர் சொல்வதை அனைத்தையும் செய்து வந்துள்ளார். மாணவியின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து மொபைல் போனை ஆராய்ந்து பார்த்ததில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது.

உடனடியாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசிரியரை சிறைபிடித்து தரையில் அமர வைத்து அடித்து உதைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாயனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இரவு நேரம் நெருங்கிய நிலையிலும் பள்ளி நிர்வாகத்தினர் ஒருவர் கூட வரவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து பள்ளியை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல் ஆய்வாளர் ஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததின் பேரில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
newstm.in

