Theme Check

ஏமாற்றிய காதலர்.. புகார் அளிக்க வந்த இளம்பெண்ணை சீரழித்த காவல் அதிகாரி..

ஏமாற்றிய காதலர்.. புகார் அளிக்க வந்த இளம்பெண்ணை சீரழித்த காவல் அதிகாரி..

ஏமாற்றிய காதலர்.. புகார் அளிக்க வந்த இளம்பெண்ணை சீரழித்த காவல் அதிகாரி..
X

காதலர் தன்னை கைவிட்டுச் சென்றுவிட்டதாக காவல்நிலையத்தில் புகாரளிக்க வந்த இளம்பெண்ணை போலீஸ் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள அரண்டால்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன் காதலன் மீது புகார் கொடுத்தார்.ஓராண்டாக காதலித்து ஒன்றாக சுற்றிவிட்டு தற்போது திருமணத்திற்கு மறுப்பதாக அந்த புகாரில் அப்பெண் கூறியிருந்தார். இது தொடர்பாக போலீஸ் எஸ்ஐ பாலகிருஷ்ணா வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இந்த நிலையில் விசாரணை என்ற பெயரில் குற்றம்சாட்டப்பட்டவரிடம் விசாரணை நடத்தாமல் மாறாக புகார் அளித்த பெண்ணின் வீட்டிற்கு தினமும் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி வந்துள்ளார்.

ஏமாற்றிய காதலர்.. புகார் அளிக்க வந்த இளம்பெண்ணை சீரழித்த காவல் அதிகாரி..

இந்நிலையில் எஸ்.ஐ பாலகிருஷ்ணா, நேற்று முன்தினம் இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்றப்போது அங்கு யாரும் இல்லாத போது அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். அவருடன் சென்றிருந்த ராமு, ஹனுமந்த ராவ் ஆகிய 2 போலீசாரும் தங்களுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று அந்த இளம்பெண்ணை வற்புறுத்தினர். ஆனால் அந்த இளம்பெண் மறுத்து போராடி அவர்களிடம் இருந்து தப்பினார். இதனையடுத்து தனக்கு நேர்ந்த கொடூமையை மாவட்ட எஸ்பியிடம் தெரிவித்து புகார் அளித்தார்.

ஏமாற்றிய காதலர்.. புகார் அளிக்க வந்த இளம்பெண்ணை சீரழித்த காவல் அதிகாரி..

பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த தகவல் அடிப்படையில் குண்டூர் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில், பாலியல் பலாத்காரம் செய்த எஸ்.ஐ பாலகிருஷ்ணா, அவருடன் சென்ற ராமு, ஹனுமந்த ராவ் ஆகிய இரண்டு போலீசார் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட எஸ்.ஐ பாலகிருஷணா, ராமு, ஹனுமந்த ராவ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் பெற்றோர்கள், உறவினர்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it