நடிகை ஸ்ரீதேவி பொண்ணு செய்த சேட்டையைப் பாருங்க! வைரலாகும் புகைப்படம்!
நடிகை ஸ்ரீதேவி பொண்ணு செய்த சேட்டையைப் பாருங்க! வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்றளவிலும் ரசிகர்களின் மனதில் மயிலாக சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமா மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, இந்தி என பல லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் ஸ்ரீதேவிக்கு தனி இடம் உண்டு.
தல அஜித் கூட, நடிகை ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே அவரது கணவர் போனி கபூருக்கு தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்துக் கொடுத்திருக்கிறார். தன்னுடைய மகள் ஜான்வி கபூரை நடிகையாக்கி அழக பார்க்க ஆசைப்பட்டார் நடிகை ஸ்ரீதேவி. ஆனாலும், மகள் நடித்த முதல் படம் ரிலீஸாவதற்குள் ஸ்ரீதேவி மரணமடைந்தார். அம்மாவின் இடத்தை பிடிக்க மகள் ஜான்வி கபூர் பல வகைகளிலும் முயற்சி செய்தாலும், பல படங்களில் நடித்து வந்தாலும், இன்னமும் பேர் சொல்கிற மாதிரியான இடத்தை அடையவில்லை.
இந்நிலையில், எப்போதுமே க்ளாமராக டிரெஸ் செய்து வரும் ஜான்வி, ரசிகர்களை சூடேற்றும் வகையில், கடல் நடுவே சூரிய ஒளியில் செம க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் பெரும் ஆதரவை அள்ளினாலும், ஸ்ரீதேவியின் மகளுக்கு இது தேவையா? ஸ்ரீதேவி க்ளாமராக போஸ் கொடுத்தாலும் அந்த புகைப்படங்களில் ஒரு போதும் ஆபாசம் இருந்ததில்லை.. இந்த பொண்ணு க்ளாமரா போஸ் தர்றேன்னு சொல்லி ஆபாசமா போஸ் தருது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

