சென்னை பாஜக தலைவர் கொலை வழக்கு.. எடப்பாடியில் பதுங்கி இருந்த ரவுடிகள் கைது !
சென்னை பாஜக தலைவர் கொலை வழக்கு.. எடப்பாடியில் பதுங்கி இருந்த ரவுடிகள் கைது !

சென்னையில் பாஜக நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சோ்ந்தவா் பாலச்சந்தா் (30). மத்திய சென்னை மாவட்ட பாஜக எஸ்சி பிரிவு தலைவராக இருந்த பாலச்சந்தருக்கு, அச்சுறுத்தல் இருந்ததால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பாலச்சந்தா் சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கா் தெருவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நின்று கொண்டிருக்கும்போது, ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். பாலச்சந்தருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவலா் பாலகிருஷ்ணன் டீ குடிக்க சென்றிருந்த நேரத்தில் இந்தக் கொலை நடந்தது. கொலை செய்துவிட்டு, அங்கிருந்து மோட்டாா் சைக்கிளில் தப்பிச் சென்றனா்.
இது தொடா்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசா வழக்குப் பதிவு செய்தனா். குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதற்கிடையே, பணியில் கவனக்குறைவாக இருந்ததாக காவலா் பாலகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சிந்தாதிரிப்பேட்டையைச் சோ்ந்த ரவுடி தா்கா மோகனின் மகன்கள் பிரதீப், சஞ்சய் கூட்டாளி கலைவாணனுடன் சோ்ந்து முன் விரோதம் காரணமாக பாலசந்தரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவா்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், பாலச்சந்தரை கொலை செய்த பிரதீப், சகோதரர் சஞ்சய், கலைவாணன், ஜோதி ஆகிய 4 பேரை எடப்பாடியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையின் முக்கிய குற்றவாளியான பிரதீப் மீது 10 குற்ற வழக்குகள் உள்ளது.
இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையில் கொலைக்கான காரணம் குறித்து முழுமையாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in

