Theme Check

சென்னை ஓட்டுநர்களே உஷார்.. 11 சாலைகளில் மூன்றாவது கண்..!

சென்னை ஓட்டுநர்களே உஷார்.. 11 சாலைகளில் மூன்றாவது கண்..!

சென்னை ஓட்டுநர்களே உஷார்.. 11 சாலைகளில் மூன்றாவது கண்..!
X

சென்னை போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் பதவியேற்ற பின்னர், சட்டம் - ஒழுங்கு மட்டுமின்றி போக்குவரத்து பிரிவிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது, தேனாம்பேட்டை அண்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, ஆர்.கே.மடம் சாலை உள்ளிட்ட 11 பிரதான சாலைகளில், 10 லட்சம் ரூபாய் செலவில் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ‘சென்னையில், வாகன ஓட்டிகளுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்னரும், அலட்சியமாக தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுகின்றனர். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை சரிவர பின்பற்றுவதில்லை.

இதுபோன்று சாலை விதிகளை மீறுவோரை கண்காணிக்க, பிரதான சாலைகளில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்கள், சாலை விதிகளை மீறும் வாகனங்களின் எண்ணை துல்லியமாக படம் பிடிக்கும்.

அத்துடன் இதன் மூலம், ஒரு மாதத்தில் வாகனங்கள் அவ்வழியாக எத்தனை முறை சென்று வந்தன என்பது குறித்தும் அறியலாம். புதிதாக, 11 முக்கிய பிரதான சாலைகளில், சாலை விதிகளை மீறுவோருக்கு இ- செலான் அனுப்பும் நடைமுறை இன்னும் சில தினங்களில் துவக்கப்பட உள்ளது’ என்றார்.

Next Story
Share it