Theme Check

சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

சென்னையில் மிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !
X

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து அனைத்து பகுதிகளிலும் இயல்பைவிட அதிகமாகவே மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் வெள்ளப்பாதிப்பை சந்தித்தன. அதன்பின்னர் மழை சற்று குறைந்தது.

இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று முன்தினம் சென்னையில் தொடர் கனமழை பெய்தது. நேற்றும் சென்னையில் மழை நீடித்தது. கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இந்த நிலையில் மேலும் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
!
அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 9 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். தஞ்சாவூர் உள்ளிட்ட மேற்படி 9 மாவட்டங்களில் நிர்வாக ரீதியாக மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

!

நாளை கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மறுதினம் (திங்கட்கிழமை) தென்தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


newstm.in

Next Story
Share it