சென்னை மக்களே உஷார்..!! நாளை முதல் மாலை நேரங்களில் கனமழை..!!
சென்னை மக்களே உஷார்..!! நாளை முதல் மாலை நேரங்களில் கனமழை..!!

கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஒருசில நாட்கள் லேசான மழையும், கடந்த 11 மற்றும் 12-ந்தேதிகளில் மாலை நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இந்நிலையில் நாளை (16-ந்தேதி) முதல் சென்னையில் மாலை நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த வார இறுதியில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையின் வடமேற்கு பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும். வரும் நாட்களில் 50 மி.மீ. வரை மழை பெய்யலாம். இந்த மழை சில நாட்களுக்கு தொடரலாம். நேற்று கடலோர பகுதியில் லேசான மழை பெய்தது. அடுத்த 48 மணி நேரத்துக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும், கடற்காற்று தாமதமாக வீசுவதால் பகல் நேரத்தில் வெப்பநிலை உயரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

