Theme Check

#BREAKING:- சனி, ஞாயிறுகளில் ஊரடங்கு அமல் - முதல்வர் கெஜ்ரிவால்

#BREAKING:- சனி, ஞாயிறுகளில் ஊரடங்கு அமல் - முதல்வர் கெஜ்ரிவால்

#BREAKING:- சனி, ஞாயிறுகளில் ஊரடங்கு அமல் - முதல்வர் கெஜ்ரிவால்
X

நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலை தீவிரமாக பரவி வருவதை தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்தில் பொதுமுடக்கமும், பல மாநிலங்களில் இரவுநேர பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் பொதுமுடக்கம் அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் டெல்லியில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிதீவிரமாக பரவி வருவதால் அங்கு வார இறுதி நாட்களாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். உடற்பயிற்சி நிலையங்கள், ஆடிட்டோரியம் உள்ளிட்டவைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் 30% இருக்கைகள் மட்டுமே அனுமதி.ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது, பார்சல்களை வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில்,"ஊடகவியலாளர்கள் மிகவும் மோசமான சூழ்நிலைகளிலிருந்து செய்தி தருகிறார்கள். அவர்களை முன்கள பணியாளர்களாக கருதி முன்னுரிமையின் அடிப்படையில் அவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக டில்லி அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது என கூறியுள்ளார்.

Tags:
Next Story
Share it