Theme Check

காவல்துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

காவல்துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

காவல்துறைக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
X

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின் முதல் நாள் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இம்மாநாட்டின் முற்பகல் கூட்ட நிறைவின்போது முதலமைச்சர் மு..ஸ்டாலின் பேசுகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்களையும், காவல் துறை கண்காணிப்பாளர்களையும் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, உங்கள் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான மாதாந்திரக் கூட்டத்தை மிகுந்த கவனத்துடன் தவறாமல் நீங்கள் நடத்திட வேண்டும் என்றார்

வாரந்தோறும் சட்டம்-ஒழுங்கு குறித்து நுண்ணறிவுப் பிரிவைச் சார்ந்த தகவல்கள் குறித்து கலந்தாலோசனையும் நீங்கள் தவறாமல் நடத்த வேண்டும். என்னுடைய அடுத்த ஆலோசனை என்னவென்று கேட்டால், நீங்கள் உங்கள் மாவட்டத்தில் Dash Board ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

மாதந்தோறும் நடைபெறுகிற சட்டம்-ஒழுங்கு தொடர்பான கூட்டத்தில் எடுக்கப்படக்கூடிய முடிவுகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது குறித்து அடுத்து வரும் கூட்டங்களில் ஆராய்ந்து முழுமையாக அதற்கான தீர்வு காண வேண்டும்.

cm

சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளும், குற்றங்களும் நிகழ்ந்து முடிந்த பின்பு அவற்றைத் தீர்ப்பதற்கும், புலனாய்வு செய்வதற்கும் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளை விட, அவை நிகழாமல் தடுப்பதற்கான முயற்சிகள் தான் மக்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும்.

எனவே, நமது வெற்றி என்பது சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதிலோ, குற்றங்களை கண்டுபிடிப்பதிலோ இருப்பதைவிட, அவை, மக்களை பாதிக்காத வகையில் தடுப்பதில் தான் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நான் ஆட்சிக்கு வந்தவுடன், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை சொல்லால் மட்டுமல்ல, செயலாலும் தொடர்ந்து பலமுறை நான் செய்தும் காட்டியிருக்கிறேன், அதையெல்லாம் நீங்கள் நன்கு அறிவீர்கள்.

mk-stalin

இதை நான் மீண்டும் சொல்வதற்குக் காரணம், வருங்காலத்திலும் இந்த நிலை தொடர வேண்டும், தொடர்வதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். நான் உங்களுக்கு இறுதியாகச் சொல்ல விரும்புவது, இந்த ஆட்சியினுடைய மதிப்பீடு என்பது சட்டம்-ஒழுங்கினைப் பராமரிப்பதில் தான் உள்ளது என்பதை நீங்கள் அனைவரும் முழுமையாக உணர்ந்து செயல்பட வேண்டும் என்று உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன் என உரையாற்றியுள்ளார்.

newstm.in

Next Story
Share it