Theme Check

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!!

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!!

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!!
X

மேல்மருவத்தூர் பங்காரு அடிகாளாரை முதல்வர் மு..ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மேல்மருவத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில்இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்தைமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சாலை விபத்தினால்பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்‌ 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும். அதுவே இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம்.

இத்திட்டத்திற்கென அங்கீகரிக்கப்பட்ட 201 அரசு மருத்துவமனைகள் மற்றும் 408 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

bangaru 1

அதனைத் தொடர்ந்து முதல்வர், அங்குள்ள ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் இல்லத்திற்குச் சென்று அவரை நேரில் நலம் விசாரித்தார். அப்போது, ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு அடிகளார், அவரது மகன் கோ..அன்பழகன் மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

bangaru 1

இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் , நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். அதோடு, ஆதிபராசக்தி அறக்கட்டளை மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்துக்கான அவசர சிகிச்சைப் பிரிவினையும் திறந்து வைத்தார்.

newstm.in

Next Story
Share it