Theme Check

மொழிப்போர் தியாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!

மொழிப்போர் தியாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!

மொழிப்போர் தியாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!
X

தாய்மொழியாம் தமிழ்மொழியை காத்திட மொழிப் போர்க்களத்தில் தங்களையே இழந்து இன்னுயிர் நீத்த தன்மான வீரர்களின் நினைவை ஏந்தி வீரவணக்கம் கூறும் நாள் ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் மொழிப்போர் தியாகிகளின் மணிமண்டபம் உள்ளது. இங்கு, 1939 மற்றும் 1965-ம் ஆண்டுகளில் மொழிப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இன்று மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் ஆகும். இதை முன்னிட்டு, சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணி மண்டபத்தில் உள்ள சென்னை நடராசன், கும்பகோணம் தாளமுத்து, சிவகங்கை ராஜேந்திரன் உள்பட மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story
Share it