Theme Check

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துபாய் பயணம்!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துபாய் பயணம்!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துபாய் பயணம்!!
X

முதலீடுகளை ஈர்க்க முதல்வர் முக ஸ்டாலின் இன்று மாலை துபாய் பயணம் மேற்கொள்கிறார்.

துபாய் எக்ஸ்போ கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில் இதில் 192 நாடுகள் பங்கேற்றன. மத்திய அரசு சார்பில் துபாய் தொழில் கண்காட்சியில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சார்பாகவும் அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கண்காட்சியில் கலந்து கொண்டு புதிய முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் மு.. ஸ்டாலின் இன்று துபாய் செல்கிறார். அங்கு முதல்வர் தமிழக அரங்கை திறந்து வைக்க உள்ளார்.

cm

இன்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபி செல்ல உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் ,வெளிநாட்டு வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்களுடனும் , முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

cm1

மேலும் புலம்பெயர் தமிழர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் தமிழக அரசு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. முதல்வர் திறந்து வைக்க உள்ள தமிழ்நாட்டு அரங்கில் தொழில்துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாசாரம் ,கைத்தறி, கைவினை பொருட்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளின் தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் காட்சி படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

newstm.in

Next Story
Share it