Theme Check

தஞ்சை மக்களை நெகிழ வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

தஞ்சை மக்களை நெகிழ வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

தஞ்சை மக்களை நெகிழ வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
X

முதலமைச்சர் மு.. ஸ்டாலின் இன்று தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 98 கோடியே 77 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 90 திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.

894 கோடியே 56 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான 134 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 44,525 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 238 கோடியே 40 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் 18 கோடியே 61 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட இராஜப்பா பூங்கா மற்றும் சரபோஜி சந்தையில் அமைக்கப்பட்டுள்ள 309 புதிய கடைகள், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 6 கோடியே 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த விதை சான்று மற்றும் அங்ககச்சான்று அலுவலக வளாகம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

stalin

தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தை 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி, கும்பகோணம் நகராட்சி சார்பில் 24 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 80 பணிகள், பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் 5 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நகராட்சி தகன மேடையை நவீன எரிவாயு தகன மேடையாக மாற்றம் செய்யும் பணி உள்ளிட்டவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 8,416 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, மாதாந்திர ஓய்வூதியம், கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகள் வழங்கினார். 2,922 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் 5,306 பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கினார்.

stalin

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 941 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 139 பயனாளிகளுக்கு முஸ்லீம் மகளிர் உதவும் சங்க நல உதவி உள்ளிட்டவற்றை வழங்கினார்.

newstm.in

Next Story
Share it