14 நாளில் 750 கி.மீ தொடர் ஓட்டம் ஓடி சாதனை செய்த சாதனை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

14 நாளில் 750 கி.மீ தொடர் ஓட்டம் ஓடி சாதனை செய்த சாதனை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!

14 நாளில் 750 கி.மீ தொடர் ஓட்டம் ஓடி சாதனை செய்த சாதனை.. முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!
X

சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் மெட்ரிக் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சர்வேஷ். கடந்த 2-ம் தேதி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் இருந்து சென்னை வள்ளுவர் கோட்டம் வரையிலான 750 கிலோமீட்டர் தொடர் ஓட்டத்தை சர்வேஷ் தொடங்கினார்.

சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் மெட்ரிக் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சர்வேஷ். கடந்த அக்டோபர் 2-ம் தேதி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் இருந்து சென்னை வள்ளுவர் கோட்டம் வரையிலான 750 கிலோமீட்டர் தொடர் ஓட்டத்தை சர்வேஷ் தொடங்கினார்.

இந்த தொடர் ஓட்டத்தை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிலையில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை 750 கிலோமீட்டர் தூரத்தை 14 நாட்கள் தொடர் ஓட்டம் மூலம் கடந்து சர்வேஷ் சாதனை படைத்துள்ளார்.

Sarvesh

ஐக்கிய நாடுகள் சபையின் பசி, பட்டினியின்மை, நல்ல ஆரோக்கியம், தரமான கல்வி, வறுமை ஒழிப்பு உட்பட 17 நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்து வழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தொடர் ஓட்டம் ஓடியதாக சிறுவன் சர்வேஷ் தெரிவித்துள்ளார்

இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள சர்வேஷுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1 லட்சம் பரிசு வழங்கினார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாரத்தானை நிறைவு செய்த பள்ளி மாணவர் சர்வேஷுக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

Tags:
Next Story
Share it