Theme Check

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை.. வெளியிட்டார் ராகுல் காந்தி !!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை.. வெளியிட்டார் ராகுல் காந்தி !!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை.. வெளியிட்டார் ராகுல் காந்தி !!
X

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ சுயசரிதை புத்தகத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கை பயணத்தை சுயசரிதையாக எழுதியுள்ளார். அதில், தனது பள்ளி- கல்லூரி படிப்பு காலம், இளமை காலம், அரசியல் ஆர்வம், முதல் அரசியல் கூட்டம், முதல் பொதுக்கூட்ட பேச்சு, திரையுலகில் கால் தடம் பதித்தது, திருமண வாழ்க்கை, மிசா காலத்தின் தொடக்கம் என 1976-ம் ஆண்டு வரையிலான 23 ஆண்டு கால வாழ்க்கை பயண வரலாற்று சுவட்டை ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகமாக எழுதி உள்ளார்.

stalim

இந்த புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார். ‘உங்களில் ஒருவன்’ (பாகம்-1) புத்தகத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. வெளியிட்டார்.

விழாவில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

newstm.in

Next Story
Share it