திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் !! பணியில் இல்லாதவர்கள் நிலைமை என்ன ?
திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் !! பணியில் இல்லாதவர்கள் நிலைமை என்ன ?

திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நேற்று திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். மேலும் செல்லும் வழியில் பொதுமக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, ரூ.118 கோடியில் கட்டப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். இதன்பின்னர் நடந்த விழாவில், 257 கோடியில் 71,103 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்ட அரசு விழாவிற்கு செல்லும் வழியில் காரைக்கூட்ரோட்டில், சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், அவ்வில்லத்தில் உள்ள மாணவர்களிடம் பாடம் நடத்தும் முறை குறித்தும், வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். ஆசிரியர்களிடம் அம்மாணவர்களை உயர்கல்வி கற்க ஊக்குவிக்க வேண்டும் என்றும், அவர்களின் எதிர்கால நல்வாழ்விற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக அந்த இல்லத்தில் பணியாற்றும் பணியாளர்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்த முதல்வர், ஆய்வின்போது, பணியில் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களிட்ம் விளக்கம்கோரி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

