Theme Check

கோயில் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

கோயில் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

கோயில் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
X

திருக்கோயில்களில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருவாய் பெறும் திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

இதன் மூலம், முழுநேரம், பகுதிநேரம், தொகுப்பூதிய பணியாளர்கள் உள்ளிட்ட திருக்கோயில்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் ரூ.1,000ஆக வழங்கப்பட்டு வந்த பொங்கல் கருணைக்கொடைத் தொகை, இவ்வாண்டில் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதன்படி, அர்ச்சகர்கள் மற்றும் சீட்டு விற்பனையாளர்களுக்கு ரூ.2, 500, காவல் பணியாளர்களுக்கு ரூ.2,200, தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.1,400 மாத சம்பளம் உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், சுமார் 10,000 திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். இதனால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூபாய் 25 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று தமிழக அரசு தனது செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story
Share it