Theme Check

மருந்து பெட்டகம் வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்..!

மருந்து பெட்டகம் வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்..!

மருந்து பெட்டகம் வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்..!
X

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி தமிழக சுகாதாரத் துறை சார்பாக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்கு தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருந்து சேவைகளின் பரிந்துரை போன்றவை பயனாளிகள் இல்லங்களுக்கு சென்று வழங்கப்படுகிறது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கம் அருகே உள்ள சித்தலபாக்கம் ஊராட்சியில் இன்று, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 50 லட்சத்து ஒன்றாவது பயணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருந்து பெட்டகம் வழங்குகிறார்.

அத்துடன், அவசரகால ஊர்திகளின் சேவைகளையும் அவர் தொடங்கி வைக்கிறார் .இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் பயனடைந்த 20 ஆயிரம் பயனாளிகளின் சார்பாக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியிலும் முதல்வர் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

Next Story
Share it