Theme Check

தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!

தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!

தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்!
X

காவிரி டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பில் ஆறுகள், வடிகால்கள், வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.

இந்தத் தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர், தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள கொக்கேரி கிராமத்தில் ரூ.14.50 லட்சம் மதிப்பில் நடந்து வரும் பிமனோடி வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் பணிகள் முடிந்துள்ள விவரங்களை கேட்டறிந்தார்.

Delta-area

டெல்டா மாவட்டங்களில் மேற்கொண்டுவரும் தூர்வாரும் பணிகள் மற்றும் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வை முடித்துக் கொண்டு அவர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டுச் சென்ற முதல்வர், இன்று திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் ஆய்வு செய்கிறார்.

Next Story
Share it