Theme Check

பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி!!

பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி!!

பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி!!
X

கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது இரண்டாவது அலையாக உருவெடுத்து பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வகையில், தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதையொட்டி பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். இது குறித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ள முதலமைச்சர், நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் கொரோனா தொற்று அதிகரித்த போது இது 50 ஆயிரத்தை தொடும் என மருத்துவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். அது கட்டுப்படுத்தப்பட்டு 15 ஆயிரத்துக்கும் குறைவான நிலையை அடைந்துள்ளது

அரசின் தீவிர நடவடிக்கைகளால் ஆக்சிஜன் படுக்கைக்கள் அதிகரிக்கப்பட்டது. படுக்கைகள் இல்லாமல் யாரும் இல்லை என்ற நிலை தற்போது எட்டப்பட்டுள்ளது. கொரோனா கட்டளை மையத்திற்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. கொரோனா முற்றிலும் ஒழிக்கப்பட்டது என்ற நிலையை அடைந்து விடுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த உதவிகரமாக இருந்த மக்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.


Tags:
Next Story
Share it