Theme Check

கைகளை நீட்டி சாட்டையடி வாங்கிய முதல்வர்..! வைரல் வீடியோ

கைகளை நீட்டி சாட்டையடி வாங்கிய முதல்வர்..! வைரல் வீடியோ

கைகளை நீட்டி சாட்டையடி வாங்கிய முதல்வர்..! வைரல் வீடியோ
X

இந்தியாவில் உள்ள சில வட மாநிலங்களில் தீபாவளிக்கு அடுத்த நாள் கோவர்தன் பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வகையாக கொண்டாடப்படும்.

அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் கோவர்தன் பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். அந்தப் பூஜையின் போது அங்கு வருவபர்களுக்கு சாட்டையடி கொடுப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஸ் பாகல் இந்த பூஜையில் இன்று கலந்து கொண்டுள்ளார். சத்தீஸ்கரின் ஜன்கிரி கிராமத்தில் நடைபெற்ற பூஜையில் இவர் பங்கேற்று மக்களுடன் வழிப்பட்டுள்ளார்.

அதன்பின்னர் அந்தப் பூஜையில் அவர் சாட்டை அடியையும் வாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.


Tags:
Next Story
Share it