ஓபிஎஸ் முழுமையாக நலம் பெற முதலமைச்சர் வாழ்த்து !!
ஓபிஎஸ் முழுமையாக நலம் பெற முதலமைச்சர் வாழ்த்து !!

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம் கொரோன தொற்று பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடந்த சில நாட்களாக சளி பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இதையடுத்து நேற்று காலையில் அவர் கொரோனா பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் பன்னீர்செல்வம் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஓ.பன்னீர்செல்வம் நேற்று லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர், எங்கள் நிபுணர்கள் குழுவின் கண்காணிப்பின் கீழ் உள்ளார். அவர் உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படி மருந்து உட்கொண்டு வருகிறார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

