Theme Check

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு: இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு: இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழப்பு: இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
X

நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி பெறும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு டில்லி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து உயர் ராணுவ அதிகாரிகள் வந்து பயிற்சி அளிப்பது வழக்கம்.

இந்நிலையில், இன்று (8ம் தேதி) இங்கு நடக்கவிருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம் சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படை தளத்திலிருந்து, 11.47 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி கிளம்பினர்.

ராணுவ மையத்தை அடைய 10 நிமிடங்கள் உள்ள நிலையில், ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பாதையிலுள்ள காட்டேரி நஞ்சப்பா சத்திரம் எனும் பள்ளத்தாக்குக்கு மேலே பறந்த போது, பிற்பகல் 12:40 மணியளவில் கடும் மேகமூட்டமான கால நிலை நிலவியது. இதனால் ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் 2 முறை மோதி விழுந்து எரிந்தது.

இந்நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்தோர் உடல்கள் பலத்த தீக்காயங்களுடன் கருகியதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரை டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது.

இந்நிலையில், ‘குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்பட 11 பேர் உயிரிழந்தனர் என விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Next Story
Share it