Theme Check

எனக்கு கொரோனா வருவதற்கு காரணம் முதல்வர் ஸ்டாலின் தான் !! 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கும் இளைஞர்

எனக்கு கொரோனா வருவதற்கு காரணம் முதல்வர் ஸ்டாலின் தான் !! 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கும் இளைஞர்

எனக்கு கொரோனா வருவதற்கு காரணம் முதல்வர் ஸ்டாலின் தான் !! 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கும் இளைஞர்
X

ரேஷன் கடையில் நிவாரணத் தொகை வாங்கச் சென்ற போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் முதல்வரிடம் 1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கிறார் இந்த இளைஞர்.

“ ஹலோ மிஸ்டர் ஸ்டாலின். நியாயவிலைக் கடையில் நிவாரண நிதி வழங்கும் உங்களுடைய முட்டாள்தனமான முடிவினால் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு நீங்கள் தான் நேரடி பொறுப்பாவீர்கள். நீங்கள் முன்னதாகக் கேட்ட 1 கோடி ரூபாய் அரசு நிவாரணத்தொகையை மறந்து விடாதீர்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்


ட்விட்டர் ஹேண்டிலில் அவருடைய இருப்பிடம் அமெரிக்காவில் உள்ள நெவடா மாநிலத்தின் லாஸ் வேகஸ் நகர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக் குறிப்பிட்டே லாஸ் வேகஸில் ரேஷன் கடையில் நிவாரணத் தொகை வாங்கச் சென்ற போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என நெட்டிசன்ஸ் கலாய்த்து வருகிறார்கள்.

அதைத் தொடர்ந்து மேலும் ஒரு ட்வீட் செய்துள்ளார் ஜானி பாய். அதில் “ ஹலோ மிஸ்டர் ஸ்டாலின் உங்கள் கட்சிக்காரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தொடர்ந்து இன்று காலை முதல் எனக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள். நான் ஒரு கொரோனா நோயாளி என்று தெரிந்தும் அவ்வாறு செய்கிறார்கள். உங்களுடைய ஆதரவாளர்கள் எனக்கு கொலை மிரட்டல்களும் கொடுத்து வருகிறார்கள். முக்கியமாக என்னுடைய உன்மையான இருப்பிடம் தெரியாமல் அவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். வளருங்கள் திமுக பாய்ஸ்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி படத்தை ப்ரொஃபைலில் வைத்துள்ள இந்த நபருக்கு உண்மையிலேயே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா? இருப்பிடத்தை ஏன் அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரைக் குறிப்பிட்டுள்ளார், சொந்த ஊரைக் குறிப்பிடுவதில் என்ன பிரச்சனை? அல்லது ஃபேக் ஐடியா? போன்ற சரமாரியான கேள்விகள் எழுந்துள்ளது.

Tags:
Next Story
Share it