Theme Check

யூடியூப் பார்த்து பிரசவம் – கணவனை கைது செய்த போலீஸ்!!

யூடியூப் பார்த்து பிரசவம் – கணவனை கைது செய்த போலீஸ்!!

யூடியூப் பார்த்து பிரசவம் – கணவனை கைது செய்த போலீஸ்!!
X

யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த புகாரில் நெடும்புளி கிராமத்தைச் சேர்ந்த லோகநாதனை காவல்துறையினர் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம் நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், கர்ப்பம் அடைந்த அவரது மனைவிக்கு கடந்த 13ஆம் தேதி பிரசவம் நாள் கொடுக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நாளில் மனைவிக்கு பிரசவ வலி வராத நிலையில், கடந்த 18ஆம் தேதி மாலை அவரது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து லோகநாதன், யூடியூப் வீடியோ பார்த்து அதன்படி தனது மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார். அப்போது, இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, அவரது மனைவி மயக்கம் அடைந்தார்.

you

அவரை, அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூட்டிச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர்.

அங்கு அவரது மனைவி சிகிச்சை பெற்றுவரும் நிலையில் குழந்தை இறப்பு குறித்து லோகநாதனிடம் நெமிலி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து லோகநாதனை நெமிலி காவல்துறையினர் கைது செய்தனர்.

newstm.in

Next Story
Share it