5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு..!!
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் - சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு..!!

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் கோரப்பிடியில் மக்கள் சிக்கித் தவித்து வரும் நிலையில் தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் புதிய வகைக் காய்ச்சல் பரவத் தொடங்கியிருக்கிறது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வகை காய்ச்சலால் பதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் தக்காளி நிறத்தில் திட்டுகள் ஏற்படுவதால் இதற்கு தக்காளி காய்ச்சல் என பெயரிடப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தின் சில மாவட்டங்களில் தக்காளி காய்ச்சல் குழந்தைகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், இந்த காய்ச்சல் குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, எந்த மாவட்டத்திலும் தக்காளி காய்ச்சல் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்றும், இந்த நோய் குறைவான ஆபத்து கொண்டது என்றும் கூறியுள்ளார். மேலும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், என கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.

காய்ச்சலுடன் தோலில் சிவப்பு நிற திட்டுக்கள் ஏற்பட்டு எரிச்சல், காய்ச்சல், வலியைத் தரும் பாதிப்பு இரண்டு நாள்களுக்கு மேல் தொடர்ந்தால் அது தக்காளி காய்ச்சலுக்கான அறிகுறிகளாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், தக்காளி நிறத்தில் பாதிப்பு ஏற்படும் இந்த வைரசுக்கும் தக்காளிக்கும் தொடர்பில்லை.

