தந்தையின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவித்த பிள்ளைகள்!!
தந்தையின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவித்த பிள்ளைகள்!!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ராட்டின மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயசீலன் – மகேஸ்வரி தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மனைவி மகேஸ்வரி உயிரிழந்ததால் மூன்று பிள்ளையையும் ஜெயசீலன் கூலி வேலைக்குச் சென்று வளர்த்து வந்தார்.
இந்நிலையில், அவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் மூன்று பிள்ளைகளும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.மேலும் தந்தையின் உடலை இறுதிச் சடங்கு செய்வதற்குக் கூட அவர்களிடம் பணம் இல்லை.

இதனால் மூன்று பேரும் கண்ணீருடன் தவித்து வந்துள்ளனர். இது பற்றி அறிந்த கிராம மக்கள் உடனே தங்களிடம் இருந்த பணத்தைக் கொண்டு ஜெயசீலனின் இறுதி நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.
இதையடுத்து கிராம மக்களுக்குக் கண்ணீருடன் மூன்று பிள்ளைகளும் நன்றி தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

