குழந்தைகள் போட்ட வழக்கு – பெரியவர்களுக்கு பாடம்!!
குழந்தைகள் போட்ட வழக்கு – பெரியவர்களுக்கு பாடம்!!

பருவநிலை மாற்றம் குறித்து தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று 33 ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் மீது குழந்தைகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இன்றைய தேதியில் உலகம் முழுவதும் அனைவருக்கும் சவாலாக இருப்பது கால நிலை மாற்றம். நாளுக்கு நாள் கால நிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இயற்கையை சீர்குலைப்பதால் காலநிலை மாற்றம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து தற்போது உள்ள இளைய தலைமுறையினர், குழந்தைகள் விழிப்புணர்வுடன் உள்ளனர். அந்த வகையில், பருவநிலை மாற்றம் குறித்து தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று 33 ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் மீது ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 6 குழந்தைகள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் முன்னோர் அனுபவித்த இயற்கை வளங்களை தங்களுக்கும் அனுபவிக்க உரிமை உண்டு. மேலும் பெரியவர்கள் செய்யத் தவறுவதை சிறுவர்கள் தான் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
newstm.in

