Theme Check

பிரதமர் மோடியை கிண்டலடித்த குழந்தைகள் டிவி நிகழ்ச்சி ! வீடியோவால் சர்ச்சை.. பாஜக கண்டனம் !!

பிரதமர் மோடியை கிண்டலடித்த குழந்தைகள் டிவி நிகழ்ச்சி ! வீடியோவால் சர்ச்சை.. பாஜக கண்டனம் !!

பிரதமர் மோடியை கிண்டலடித்த குழந்தைகள் டிவி நிகழ்ச்சி ! வீடியோவால் சர்ச்சை.. பாஜக கண்டனம் !!
X

பிரதமர் மோடியை கிண்டல் செய்து தனியார் டிவி நசைச்சுவை நிகழ்ச்சிக்கு தமிழக பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இருக்கும் முன்னணி தனியார் பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனல் ஒன்றில் குழந்தைகள் சம்பந்தமான நசைச்சுவை ரியாலிட்டி ஷோ-வில், பிரதமர் மோடியை கிண்டல் செய்து காட்சி அமைத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் இருக்கும் முன்னணி பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனலில் குழந்தைகள் சம்பந்தமான நசைச்சுவை ரியாலிட்டி ஷோ-வில், புலிகேசி மன்னர் போலவும், மங்குனி அமைச்சராகவும் இரு குழந்தைகள் செய்த நகைச்சுவைக் காட்சி தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

modi

அந்த இரண்டு குழந்தைகளும் பிரதமர் மோடியின் கருப்பு பண நடவடிக்கை, பிரதமரின் வெளிநாட்டு பயணம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது உள்ளிட்ட நிகழ்வுகளை விமர்சித்து வசனங்களை பேசியிருந்தனர். அதோடு வட மாநிலங்களில் தாங்கள் மாறுவேடத்தில் செல்ல வேண்டும் எனவும், தென்னகத்தில் மன்னராகவே வந்தாலும் யாரும் மதிக்க மாட்டார்கள் எனவும் நசைச்சுவையாக தெரிவித்தனர்.

இது தொடர்பான வீடியோவை நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட திமுக, காங்கிரஸை சேர்ந்த வெளியிட்ட நிலையில் சமூக வலைதளங்களில் வைரலானது.

modi

இதையடுத்து அந்த நகைச்சுவை காட்சிக்கு பாஜக-வினரிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு எல். முருகன் அவர்கள் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பாரத பிரதமர் அவர்கள் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி கேட்டறிந்தார். நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்! அவருக்கு என் நன்றிகள் என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் பெரிய பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், அது குறித்த வீடியோ குறித்த சேனலின் அதிகாரபூர்வ செயலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.


newstm.in


Next Story
Share it