Theme Check

இந்தியாவுக்கு சீன அட்வைஸ்! அமைதியை கடைப்பிடிக்க வேண்டுகோள்!

இந்தியாவுக்கு சீன அட்வைஸ்! அமைதியை கடைப்பிடிக்க வேண்டுகோள்!

இந்தியாவுக்கு சீன அட்வைஸ்! அமைதியை கடைப்பிடிக்க வேண்டுகோள்!
X

இந்தியா சீனா எல்லைப்பகுதி தொடர்பாக அதிகாரிகள் அளவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்களின் படி லடாக்கில் இந்தியாவும், சீனாவும் படைகளை விலக்கியுள்ளன. மீதமுள்ள இடங்களிலும் படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக ஏப்ரல் 9ம் தேதி இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் சந்தித்து பேசியுள்ளனர்.

இந்த 11-வது சுற்று பேச்சுவார்த்தையில் கோக்ரா, தேப்சாங், ஹாட்ஸ்பிரிங் போன்ற பகுதிகளில் இருந்தும் படைகளை திரும்பப்பெறுவது குறித்தும் விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலைத்தன்மையை கூட்டாக பராமரிப்பது எனவும், நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை வேகப்படுத்தவும் இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் ஒப்புக்கெண்டதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து சீன ராணுவம் வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி தற்போது எல்லையில் நிலவும் சாதகமான போக்கை இந்தியா ஏற்க வேண்டும் எனவும், அங்கு அமைதியை பராமரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் முந்தைய பேச்சுவார்த்தைகளின் படி, எல்லையில் பதற்றத்தை தணித்து எல்லைப்பகுதிகளில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பராமரிக்கும் சீனாவின் இலக்கை நோக்கி நகர்வார்கள் எனவும் எதிர்பார்க்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it