Theme Check

சீன விமான விபத்து – 2ஆவது கருப்பு பெட்டியும் மீட்பு!!

சீன விமான விபத்து – 2ஆவது கருப்பு பெட்டியும் மீட்பு!!

சீன விமான விபத்து – 2ஆவது கருப்பு பெட்டியும் மீட்பு!!
X

சீன விமான விபத்து தொடர்பான 2ஆவது கருப்புப் பெட்டியும் மீட்கப்பட்டுள்ளதால் விபத்துக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 21ஆம் தேதி சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்திலிருந்து, குவாங்சு மாகாணத்தை நோக்கி 132 பேருடன் சென்ற போயிங் 737-800 ரக விமானம் விபத்துக்குள்ளானது.

அதில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 3 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், விபத்துக்கான காரணத்தை கண்டறிவது கடினமாக இருந்தது. ஏனென்றால் விமானத்தில் இருந்த இரண்டு கருப்பு பெட்டிகளில் ஒன்றை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

china black box

விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடித்தால் மட்டுமே விபத்திற்கான காரணம் குறித்து கண்டறிய முடியும் என்பதால், அதனை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இரண்டு கருப்பு பெட்டிகளில் ஒரு கருப்பு பெட்டி கடந்த 23ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

china 1

இந்நிலையில் விமானத்தின் இரண்டாவது கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருப்பு பெட்டியில் பதிவாகி இருக்கும் விமானிகளின் உரையாடல்கள், விமானத்தின் பதிவுகள் ஆகியவை மூலம் விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய முடியும். இரண்டாவது கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளதால் விமான விபத்துக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Next Story
Share it