சித்ரா தற்கொலை செய்துகொண்ட ஃபேனை தொட்டு கதறி அழுத தாய்.!!
சித்ரா தற்கொலை செய்துகொண்ட ஃபேனை தொட்டு கதறி அழுத தாய்.!!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட அறைக்குள் சென்ற அவருடைய தாய் மற்றும் தந்தை இருவரும் சீலிங் ஃபேனை தொட்டு கதறி அழுத வீடியோ வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் தமிழ் குடும்ப இல்லங்களில் முல்லையாக வாழ்ந்தவர் சித்ரா. இவருக்கும் ஹேம்நாத்துக்கும் பதிவுத் திருமணம் நடந்த சில வாரங்களில், நடிகை சித்ரா பிரபல நட்சத்திர ஹோட்டலில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இவருடைய மரணத்திற்கு ஹேம்நாத் தான் காரணம் என சித்ராவின் குடும்பத்தார் கடுமையாக குற்றஞ்சாட்டினர். அதை தொடர்ந்து கதை செய்யப்பட்ட ஹேம்நாத் சித்ராவின் தற்கொலை தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர் பிணையில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்ட விடுதி அறைக்குள் இருக்கும் பொருட்களை எடுக்க அவருடைய தாய், தந்தை உள்ளிட்ட உறவினர்களை போலீசார் அனுமதித்தனர். அறைக்குள் சென்ற சித்ராவின் தாய், அவர் தற்கொலை செய்துகொண்ட ஃபேனை தொட்டு கதறி துடிதுடித்து அழுதார். சித்ராவின் தந்தையும் கட்டில் மீது ஏறி கதறி அழுதார்.

மேலும் அந்த அறைக்குள் மதுபாட்டில்கள், சிகரெட் கட்டு போன்றவை கிடந்துள்ளது. இது எல்லாம் அந்த ஹேம்நாத்துக்கு சொந்தமானது. இதை எப்படி விடுதி நிர்வாகம் அறைக்குள் அனுமதித்தது என சண்டை போட்டனர். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. விரைவில் மகளின் தற்கொலை சம்பவத்தில் உரிய நீதி கிடைக்க வேண்டும் என அவருடைய தாய் மற்றும் தந்தை இருவரும் கோரிக்கை விடுத்தனர்.
newstm.in

