Theme Check

பாட்டு சத்தம் அதிகமென கூறிய கிறிஸ்தவ இளைஞர் கொலை !!

பாட்டு சத்தம் அதிகமென கூறிய கிறிஸ்தவ இளைஞர் கொலை !!

பாட்டு சத்தம் அதிகமென கூறிய கிறிஸ்தவ இளைஞர் கொலை !!
X

பாகிஸ்தான் நாட்டில் முஸ்லிம்கள் தவிர்த்து பிற மதத்தினர் மைனாரிட்டிகளாக உள்ளனர். பாகிஸ்தானில் மைனாரிட்டி சமூக மக்களாக உள்ள இந்துகள், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் லாகூர் நகரில் வால்டன் என்ற பகுதியில், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் கிறிஸ்தவ இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார். அந்த பகுதியை சேர்ந்த கிறிஸ்தவரான பர்வேஸ் மசீ (25) என்பவர், தனது அண்டை வீட்டாரான சோனி மாலிக் என்பவரிடம் இசையின் சப்தம் அதிகம் இருக்கிறது. அதனால், ஒலியை சற்று குறைக்கும்படி கேட்டு கொண்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி ஏற்பட்ட மோதலில், கடந்த ஞாயிற்று கிழமை மாலையில், மாலிக் மற்றும் அவருடன் சேர்ந்த கும்பல், பர்வேசின் உறவினரான சோபல் மசீ என்பவரை தாக்கியுள்ளனர். இதில் அவர் காயமடைந்து உள்ளார்.

s

இந்த நிலையில், மாலிக் மற்றும் சிலர் அடங்கிய கும்பல் பர்வேசை செங்கற்கள் மற்றும் ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சம்பவ பகுதியிலேயே பர்வேஸ் உயிரிழந்து உள்ளார். அந்த கும்பல் வானை நோக்கி துப்பாக்கியாலும் சுட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு முந்தின நாள் ஸ்னூக்கர் விளையாட்டுக்கான கிளப் ஒன்றில் ஏற்பட்ட மோதலில், பர்வேஸ் மற்றும் மாலிக் இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக திட்டியுள்ளனர். உயிரிழந்த பர்வேசுக்கு 7 சகோதரிகள் உள்ளனர். இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும்படி வலியுறுத்தினர்.

இந்த சம்பவத்தில் 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டனர். இரு தரப்பினருக்கு இடையே மீண்டும் மோதல்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

newstm.in


Next Story
Share it