வீட்டில் சிகிரெட் பிடிப்பவர்களா !! இதை செய்தால் உடனே தீர்வு கிடைக்கும்.
காபிக் கொட்டைகளை ஒரு போதும் வெளியே தூக்கி எறியாதீர்கள். காப்பிக் கொட்டைகளை துர்நாற்றமுள்ள இடத்தில் வையுங்கள். காப்பிக் கொட்டைகளில் இருந்து வரும் அதீத வாசனை, துர்நாற்றத்திலிருந்து தற்காலிகத் தீர்வைத் தரும். பேக்கிங் சோடாவை துர்நாற்றம் அதிகமுள்ள இடங்களில் தெளிக்கவும்.

புகைப்பழக்கம் புகை பிடிப்பவர்க்கும் அவர்களை சுற்றி உள்ளவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். வீட்டிற்கு தெரியாமல் வீட்டின் ஓரமாக புகைப்பிடித்தால் வீடு முழுவதும் நாற்றம் பரவிவிடும். இது வீட்டில் இருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சிலருக்கு குமட்டல் வந்துவிடும் அளவுக்கு சென்றுவிடும். இது போன்ற புகை வாடை வராமல் இருக்க வீட்டில் இருக்கும் பொருள்களை கொண்டு இந்த வாடயை வெளியேற செய்யலாம்.

காபிக் கொட்டைகளை ஒரு போதும் வெளியே தூக்கி எறியாதீர்கள். காப்பிக் கொட்டைகளை துர்நாற்றமுள்ள இடத்தில் வையுங்கள். காப்பிக் கொட்டைகளில் இருந்து வரும் அதீத வாசனை, துர்நாற்றத்திலிருந்து தற்காலிகத் தீர்வைத் தரும்.
பேக்கிங் சோடாவை துர்நாற்றம் அதிகமுள்ள இடங்களில் தெளிக்கவும். புகை எல்லா இடங்களிலும் ஊடுருவி இருக்கும் என்பதால் கார்பெட், வீட்டு உபயோகப் பொருட்கள், கார் சீட்டுகள் போன்றவற்றில் இதைக் கொட்டலாம். சிறுது நேரம் கழித்து அதை துடைத்து எடுத்து விடுங்கள்.
.வெண்ணிலா ஃப்ளேவரில் ஊறவைக்கப்பட்ட காட்டன் பந்துகள். இது காற்றில் கலந்து முற்றிலுமாக சிகிரெட் வாடையை வெளியேற்றும்.
ஆப்பிளை இரண்டாக நறுக்கி துர்நாற்றம் வீசும் இடங்களில் வைக்க வேண்டும். துர்நாற்றத்தைக் கவரும் தன்மை ஆப்பிளுக்கு இருப்பதால் விரைவில் துர்நாற்றத்தை வெளியேற்றும்.
அம்மோனியா நீரைக் கொண்டு தரையை துடையுங்கள். அமோனியாவுக்கு இயற்கையாகவே கெட்ட வாடயை வெளியேற்றும் தன்மை இருக்குது.இதை எல்லாம் செய்வதை விட புகை பிடிப்பதை முற்றிலுமாக விட்டு விடுங்கள், அதுசிகிரெட் பிடிப்பவரையும் நமது சுற்றத்தை ஆரோக்யமாக நோய் இன்றி வாழ உதவும்
newstm.in

